செய்திகள்
குமாரபுரம் ஶ்ரீ சித்திர வேலாயுத ஆலய தோட்டத்துக்கான 16 அடி அகலமும் 32 அடி ஆளமும் கொண்ட பாரிய கிணறு தோண்டப்பட்டது.
குமாரபுரம் ஶ்ரீ சித்திர வேலாயுதர் ஆலயத்தினையும் ஆலயத்தின் 58 ஏக்கர் தோட்டத்தினையும் பராமரிப்பாதற்காக பாரிய கிணறு தேவைப்பட்டது. இதனை கட்டி முடிக்க 8 இலட்சம் முதல் 10 இலட்சம் வரையான பணம் தேவைப்படும் என கணக்கிடப்பட்டிருந்தது.
இதனை அறிந்த கணுக்கேணியைச் சேர்ந்ந் காலஞ்சென்ற அமரர் நடராஜபிள்ளை (மாணிக்கவாசகம்) அவர்களின் புதல்வனான கனடாவில் வசிக்கும் திரு ந வசீகரன் தம்பதியினர் தாமாகவே முன்வந்து இந்த பாரிய கிணற்றை கட்டி அதற்கான மோட்டர் மற்றும் நீர்த்தாங்கியையும் கட்டித் தருவதற்கான நிதியினை கொடுத்து உதவியுள்ளனர்.
இந்த கொடையாளர்களுக்கு ஆலய நிர்வாக சபையின் சார்பாக நன்றியினை தெரிவிப்பதோடு் எல்லாம் வல்ல குமாரபுரம் ஶ்ரீ சித்திர வேலாயுதர் அருளினை வேண்டி நிற்கிறோம்.
இதுபோன்று குமாரபுரம் ஶ்ரீ சித்திர வேலாயுதர் ஆலயத்துக் ஏராளமான அன்பர்கள் பல்வேறு திருப்பணிகளுக்கான பெரும் நிதி உதவிகளை செய்துவருகின்றனர். அவர்கள் விபரங்கள் எதிர்வரும் காலங்களில் ஆலய இணையத்தளத்தினூடாக வெளியிடப்படும்.